ஆர்.வெங்கடேஷ்
.....வார்த்தைகளைப் பற்றிய கவனம் கூர்மையடைந்தது அதற்குப் பின்னால்தான். அதேசமயத்தில்தான் ம.வே.சிவகுமாரின் கதைகளை எல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய மொழியில் அப்படி ஒரு சொற்செட்டு இருக்கும். இப்போதும் விமலாதித்த மாமல்லன், தமது டிவீட்டுகளிலும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களிலும் இப்படிப்பட்ட சொற்செட்டைக் கையாள்வது தெரியும். மாமல்லன் ஒருபடி மேலே போய், ஒருசில வாக்கியங்களில் ஐ, ஆல், கு, இன், அது, கண் எல்லாவற்றையும் கூட நீக்கிவிட்டு எழுத முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் எழுவதுண்டு.
மொழிவளம் அதிகமாக சொற்சிக்கனம் கைகூடும். “என்றார்கள்”, ”சொன்னார்கள்”, ”கிறு”, “கின்று” விகுதிகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். வழக்கமான ஆரம்பம், வழக்கமான முடிவு போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று முனைந்தாலே புது வாக்கியம் கிடைக்கும். ஒரு கட்டத்தில், ஒரு கதைக்குள் ஒரு சொல் மறுமுறை இடம்பெறக்கூடாது என்ற கட்டுப்பாட்டைக்கூட வகுத்துக்கொண்டு எழுதியிருக்கிறேன். மேலும், தவிர, அதே போல், இந்நிலையில் போன்ற இணைப்புச் சொற்களை மிகவும் பொருள்பொதிந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்துவது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டேன். இவை இல்லாமலும் வாக்கியம், முழுமை பெறும். பொருள் புரியும்.
No comments:
Post a Comment