பாம்பு வழிபாடு – வைக்கம் முஹம்மது பஷீர்
.....அன்றொரு நாள் இரவு பதினோரு மணிக்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும்
என்பதற்காக எழுந்தேன். பார்த்தபோது சமையலறைக்கு அருகிலிருந்த மண்ணால் ஆன
திண்ணைக்கு முன்னால், மணல் பரப்பப்பட்ட மூன்று கற்களை வைத்து தேங்காய்
மட்டைகளை எரிய வைத்து உம்மா நெய்யப்பம் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வாப்பாவும் மற்ற பிள்ளைகளும் உள்ளே உறக்கத் தில் இருந்தார்கள். உம்மா
விற்குத் துணையாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் இருந்தாள். அவள்
கொஞ்சம் தேங்காய் நார்களைக் கொண்டு வந்து கயிறு பிரித்துக்
கொண்டிருந்தாள். ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கு உம்மாவிற்கு அருகில்
பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. வாசலிலும் பிற இடங்களிலும் அடர்த்தியான
இருட்டு இருந்தது. நானும் இருட்டிற்குள் நுழைந்தேன். வாசலுக்கு அருகில்
புதியதாக தோண்டப்பட்ட கிணறு இருந்தது. அதற்கு அரைச்சுவர் கட்டப்படாமல்
இருந்தது. கிணற்றின் கரையில் இருந்த பானையில் நீர் மூடி
வைக்கப்பட்டிருந்தது. நான் இருட்டில் சிறுநீர் கழித்து விட்டு
கழுவிக்கொண்டு வந்து உம்மாவின் அருகில் உட்கார்ந்து, முறத்திலிருந்து
நெய்யப்பத்தை எடுத்து பிய்த்து தின்ன ஆரம்பித்தேன். நான் வாசலை நோக்கி
கால்களை நீட்டி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். நான் கால்களை
ஆட்டும்போது பிரித்துக் கொண்டிருக்கும் கயிற்றில் கால்கள் பட்டன. அப்படியே
நெய்யப்பத்தைத் தின்று கொண்டிருக்கும்போது, திடீரென்று நான் கதகளியில்
முத்திரை காட்டுவதைப் போல இருந்து விட்டேன். ஒரு அசைவும் இல்லை. வலக்
கையில் இருந்த நெய்யப்பத்தை வாய்க்கு கொண்டு செல்கிறேன். அப்படியே நின்று
விடுகிறது. காரணம், என்னுடைய வலக் காலின் முழங்காலுக்கு அருகில் பாம்பின்
வால் அசைகிறது. வளைந்த வால் அல்ல. பருமன் குறைந்து வளையாமல் இருக்கும்
கறுப்பு நிற வால். தலையை என்னுடைய பாதத்தில் வைத்துவிட்டு பாம்பு என்னுடைய
காலில் அழகாகச் சுற்றியிருந்தது. கறுப்பு நிறப் பாம்புதான். ஆங்காங்கே
வெள்ளை நிறத் தில் புள்ளிகள் இருக்கன் றனவோ என்று சந்தேகம். நான் அப்படி உட்கார்ந்திருப் பதை கயிறு
பிரித்துக் கொண்டிருந்த இளம்பெண் பார்த்தாள். அவளுக்கு சிரிக்க வேண்டும்
போல தோன்றியது. ஆனால், திடீரென்று சிரிப்பு பயங்கரமான கூச்சலைப் போன்ற
அழுகையாக மாறியது. உம்மாவும் பார்த்துவிட்டாள். உம்மாவும் இளம்பெண்ணும்
சேர்ந்து வாய்விட்டு உரத்த குரலில் கூப்பாடு போடத் தொடங்கினார்கள். வாப்பா
எழுந்து வந்தார். எரிந்து கொண்டிருந்த கயிறு, பந்தம், விளக்குகள்,
பிரம்புகள் ஆகியவற்றுடன் சில நொடிகளில் பக்கத்து வீடுகளில் இருந்து பல
வகைப்பட்ட ஜாதிகளையும் மதங்களையும் சேர்ந்த பத்து முப்பது ஆட்கள் வாசலில்
கூடிவிட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஒரு பிடியும்
கிடைக்கவில்லை. விளக்கு களின் ஒரு பெரிய அரை வட்டம் வாசலில் இருந்தது.
வெண்மை நிறத்தில் கால், “பளபளா’ என்று மின்னிக் கொண்டிருந்த கறுப்பு நிறப்
பாம்பு.
' பாம்பு வழிபாடு' சிறுகதையில் – வைக்கம் முஹம்மது பஷீர்
No comments:
Post a Comment