Friday, 18 January 2013

நடிப்பு ஒரு கடினமான தொழில்

 நடிப்பு ஒரு கடினமான தொழில்.
 நடிப்பு ஒரு கடினமான தொழில். சொல்லப்போனால் எல்லாத்தொழில்களைக் காட்டிலும் மிகவும் கடினமானது.நடிப்பு கடினமானது என்பதனால் அல்ல. பலவகைத்   துறைகளில் அலைந்து திரிந்து பார்த்து விட்டு  நடிப்புத் துறை நாடி வந்திருக்கும் ஏராளமான  ஆர்வல ர்களின்  எண்ணிக்கையால் தான். 
அவர்கள் தான் நடிப்பின் கொலஸ்ட்ரால்கல். உங்களைச் சேரவேண்டிய ரத்தக்குழாய்களை  அடைத்திருப்போர் அவர்கள் தான். ஒரு நடிகராவதில் உள்ள சிரமத்தின் நடுவே தம் மூக்கை நுழைத்துக்கொண்டு சுற்றியலைந்து கொண்டு அவர்கள் நடிப்புத்தொழிலுக்கே ஒரு கெட்டபெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள் .மேலும் நீங்கள் நடிகர் ஆவதற்கு பெரிய இடைஞ்சல் தருகிறார்கள்.
நீங்கள் அவர்களில் ஒருவர் ஆய்விடக்கூடாது. டாவோ சொல்வது இது தான். நீங்கள் நடிகர் ஆகவேண்டுமானால் கட்டாயம் நடிக்க வேண்டும். நடிக்கும் வாய்ப்பு உடனே உங்களுக்குக் கிடைக்கவில்லை   என்றால், உங்கள் சொந்தமான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள். உங்கள் சொந்தமான தியேட்டரை நீங்களே உருவாக்குங்கள்.நண்பர்களை ஒன்ருசேர்த்துக்கொண்டு ஓரிரு நாடத்தயாரிப்புகளை நீங்களை உருவாக்குங்கள்.நாடகத்தை நடித்துக்காட்ட ஓர் இடத்தைக் கண்டுபிடியுங்கள்.அப்படி ஒரு இடம் கிடைப்பதோடு அல்லாமல் டிக்கட்களை விற்றுச்  சிறிது பணம் சேர்க்கவும் தோதாக அமைய  சிறிய அரங்க அமைப்பு  உள்ள உள்ளூர் ஹோட்டல் ஒன்றைக் கண்டுபிடியுங்கள். நிர்வாகத்தினரிடம் ஒரு தாழ்ந்த மேடை அமைத்து ப்ளட் லைட்கள் வைக்க இரும்புக்கம்பங்களுக்கு ஏற்பாடு செய்யக் கோருங்கள் அவர்கள் உங்களுக்கு டின்னர் பரிமாற நீங்கள் உங்கள் நாடகத்தை நீங்கள் நடிக்கிற நாடகத்தை அரங்கேற்றுங்கள். அவர்கள் அந்த நிகழ்ச்சியை ஒரு டின்னர் தியேட்டர் நிகழ்ச்சியாக அறிவிக்கட்டும்.
உங்கள் நாடகக்குழு உறுப்பினர்கள் டிக்கட் விலையில் நியாயமான பங்கு வீதம் ஒன்றை ஒவ்வொருவரும் பெறுமாறு திட்டமிடுங்கள், நண்பர்கள் மற்றும் மீடியாக்களுக்காக  மிகச் சிறிய அளவு காம்ப்ளிமென்டரி டிக்கட்கள் மட்டுமே அனுமதிக்க ஒப்புக்கொள்ளுங்கள். நாடகக்குழுவினருக்கு டிஸ்கௌண்ட் விலையில் டின்னர் பெற ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
['டாவோ ஆப் ஏக்டிங்' என்ற நூலில் இருந்து  ] 

Acting is a hard profession.  Maybe it is the most difficult of all.  This is not because acting is hard; rather, it is due to the tremendous numbers of aspirants who have wandered in from schools of all types.  They are the cholesterol of acting.  They clog the arteries that lead to your employment.  By hanging around and sniveling about the difficulty of becoming an actor, they give the profession a bad name, and make it difficult for you to become an actor.

You must not be one of them.  The Tao says that to be an actor, you must act.  If there is no readily available acting opportunity for you, create your own.  Start your own theatre.  Get together with friends and work up an idea for a production or two.  Then go find a place to present it.  One place that may not only be available to you, but also may help you sell tickets for your production so you can make a little money with it, is a local restaurant that has a banquet room.  Talk to the management about putting a low platform and a couple of floodlights on poles in there.  They serve dinner and you present a show.  They market it as a dinner-theatre event. 

You work out with them that your production group gets a fair percentage of the ticket price based on so much per person in attendance.  Agree on a very small number of complimentary admissions that both you and the restaurant may have for friends and the media.  Arrange that the performance company members may purchase dinner at an employee’s discount.  .( An excerpt from 'Tao of Acting')

No comments:

Post a Comment