Tuesday 20 September 2016

வண்ண வண்ணமாய்க் கொஞ்சம் கம்பன்

வண்ண வண்ணமாய்க் கொஞ்சம் கம்பன் 
--------------------------------------------------------------- 
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
அருளிய திருவே
நீல வண்டினம் படிந்து எழ,
வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள்.
பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன
நிகர்ப்பன – காணாய்
ஒழுக்க நெறி என்பது இது என்று அருந்ததிக்கு அறிவித்த லட்சுமியே ! பொன் நிற மலர்களைக்கொண்டவேங்கை மரத்தின் பூங்கிளைகளின் மேல் நீல நிறமான வண்டுக்கூட்டங்கள் உட்கார்ந்து எழுவதால் அக்கிளைகள் கீழே வளைந்து பின் நிமிர்கின்றன. அதனால் பொன்நிற மலர்கள் உதிர்ந்து உன் திருவடிகளை அடைவது, உன்னைத் தொழுவதைப் போல் இருப்பதைப்பார்!
-வையவன் 

Thursday 7 March 2013

றெக்கை கட்டி நீந்துபவர்கள்

றெக்கை கட்டி நீந்துபவர்கள் 
சிறுகதைத் தொகுதி 
ஆசிரியர் : பாரதிபாலன் 
பக்கங்கள்: 136
விலை:ரூ.95/-
வெளியீடு:சந்தியா பதிப்பகம் 
புதிய எண் .77,53வது தெரு,
9வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை-600083(தொ.பே.044-24896979
-------------------------------
ஒவ்வொரு கலைவடிவங்களும் தனக்கான வடிவத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. அப்படி நேர்வதைத் தான் நேர்த்தி என்கிறோமோ?- முன்னுரையில் பாரதிபாலன் 

தேனி மாவட்டத்தில் எந்தெந்த மாதிரியோ  கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.நுண்மாண் நுழைபுலம் கண்டு தமிழ் மண்ணின் தனி நிறத்தை,தனிக்குரலைத் , தனிச் சுவையை  கூர்ந்து கவனித்துப் பதிவு செய்கிறவர் வரிசையில் சினிமாவுக்கு வந்த பாரதிராஜா , இளையராஜா. இப்படி அந்த மாவட்டத்தில் பலர்.
 எழுத்தாளர்கள் குறைவு. 
ஈடு செய்ய வந்தவர் பாரதிபாலன் 
சின்னமனூரின் குசச்செட்டியார்,மரத்தச்சன் நெசவாளர், பூட்டு செய்கிறவர்,பாம்பாட்டி வித்தைக்காரர்,பூம்பூம் மாட்டுக்காரர், நகை செய்கிறவர் போன்றே சிறுகதை வடிவத்தில்  கலையைச் சிருஷ்டித்துப் பார்க்கிற, பெரிய பலன்களை எதிர்பாராத கலா திருஷ்டியின் சிற்றுளி பட்ட சிற்பங்களாக 12 சிறுகதைகள்.இந்தத் தொகுதியில்.
நேர்வது மட்டுமே நேர்த்தியாகாது.செய்திறன், உணர்திறன் கூடினாலே நேர்த்தி கிட்டும் என்று இந்தத் தொகுதியின் ஒவ்வொரு சிறுகதையிலும் சொல்லாமல் சொல்கிறார் பாரதிபாலன்.
"ஏலே,ஒன்பதுக்கு அடுத்து என்னடா?" ஒரு பையன் கேட்பான்.
பத்து என்று புதிருக்குப் பதில் சொல்வது போல் சுற்றி நிற்பவர்கள் சொல்லிச் சிரிப்பார்கள் 
பத்மநாபன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு இயல்பாக நேரும் சுருக்குப் பெயர் எத்தனை பேருக்கு அப்படி உறுத்தி இருக்கும்?அந்தப் பெயர்  எந்தெந்த விதமாக வெல்லாம் கூப்பிடப்படும்? பாரதிபாலனின்செவிகள் பதிவு செய்து நமக்குள் ஒரு புன்னகையை வரவழைக்கின்றன.
பெயர் எண்ணாக மாறிவிடும்போது ஓர் உயிரில் ஒரு சோகம் பதிவாகி விடுகிறது.வளர்ந்து வாலிபனாகி,மணந்து பெண் பிள்ளை பெற்று அவளும் பெயருக்குப் பதில் எண் விளி பெறுவது கண்டு மனசு துடிக்கிறது. இந்த சின்னஞ்சிறு சோகமும் ஏக்கமும் கூட வாழ்க்கை வழங்கும் எழில் கோலம் தான்.'எண்களால் ஆனவர்கள் 'கதையில் .போட்டுக்காட்டி நெஞ்சை நெருடுகிறார் பாரதிபாலன் 
இயலாமையால் சுருங்குகிற போது தான் மனம் சுடுகிறது 'றெக்கை கட்டி நீந்துபவர்கள் ' கதையில் மனைவிடம் ஏதும் கேட்கமுடியாத, அறியமுடியாத அவளிடமிருந்து ஆறுதல் பெறமுடியாத, எவ்வளவு முயன்றும் அவளுக்குள் நுழைய முடியாத கணவன் ஒருவனின் இதய ஒலிகளை சிதார் வாத்தியத்தில் 
வருடுவது போல் வருடிக்காட்டுகிறார்.
முப்பது வருஷம் வேலைக்குப் போகும்போது கவனிக்கத் தவறிய சாலை வெய்யில் ரிடையர் ஆன பின் கவனிக்கப்படுகிறது.வேர்வைப் பிசுபிசுப்பிலும் 
மனுஷ நெரிசல் புழுக்கத்திலும் உணரப்பட்ட வெயில் அல்ல அது. வேறு விதமான வெயில்.வேலை பார்த்த கட்டிடங்களில், திறந்த ஜன்னல்களில் புகுந்து புகுந்து வெளிவந்து விளையாடும் புறாக்கள் இப்போது கவனிக்கப்படுகின்றன.மனசில் ஒரு தோல்வி.அலுவலக உறவுகளில் அடைந்த தோல்விகளை விட மகா தோல்வி.எனினும் 'கூடு திரும்புதல்' கதையில் வீடு திரும்பும் வயோதிகருக்கு  மீதமிருக்கிற பொழுதுகள் பற்றிய ஆறுதல்.நம் மனசின் ஒரு ஜன்னலில் சில புறாக்கள் நுழைந்து சிறகுகள் படபடக்க மற்றொரு ஜன்னலில் வெளியேறுகின்றன.
'பய புள்ளீக அம்புட்டையும் புடுங்கிப்போட்டு அகலமா ரோடு போடப்போறாங்கலாம்;நாலு வழிப்பாதையாம்! மூணு மயிலு நாலு மயிலு தூரம் எம்புட்டு மரங்க!அம்புட்டையும் தரைமட்டமாக்கிப் போட்டுட்டு தங்க நாற்கரச்சாலை கொண்டாரப்போராங் களாம் அப்புறம் எம்போல அப்புராணிங்க எல்லாம் இப்படி நடக்க முடியுமோ என்னவோ!' இருமருங்கிலும் புளிய மரங்கள் அடர்ந்த நிழல் படர்ந்த சாலையில் நடந்து சென்ற  மணியக்காரர் மன ஓலம் கேட்கிற கதை தான் 'ஒலியும் ஒளியும் '
"தேவி, இங்கே வாயேன்!"
"அடுப்புலே வெச்சிருக்கேன்"
"நெருப்போட விளையாடத்தான் பிடிக்குமாக்கும்?"
"அரைமணி தாமதமானாலும் உங்க வயித்திலே நெருப்பு மூண்டிடுமே !" 
"இதுவும் ஒரு பசி தான்,வா!"
ஒருநாள் ஒருபோழுதாவதாவது கலைந்த தலையோடோ, கலர் மங்கிய சேலையோடோ கண்டிராத காதல் மனைவி அடுப்பங்கரை வேள்வியில் அன்றாட குடும்பப் போக்கின் யக்ஞத்தில்  படித்த படிப்பை,இருந்த ரசனைகளை எல்லாம் கரைத்துக்கொள்ளும் சொல்லில் வராத சோகத்தைத் தீட்டிக் காட்டும்போது,கர்மயோகியாகி விட்ட மனைவியின் மன முடுக்கில் ஒரு துளி காதலுக்கு மனுப்போடும் கணவனின் கனவாகிவிட்ட பந்தங்கள் நம் வீட்டிலும் நிழலாடுவது,நீயும் நானும் வேறல்ல' கதையில்  புலப்படுகிறது.
கண்ணகி மதுரையை எரிக்கிறாள்.சந்தான லக்ஷ்மி நயவஞ்சக  நாடகம் போடும் கரஸ்பாண்டன்ட் முகத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுக் காறித் துப்புகிறாள்.நயவஞ்சக  நாடகத்தை வெகு நயமாகக் கையாளும் பாரதிபாலனிடம் மற்றொரு கலைப்பண்பு மறைந்திருப்பது'பெருந்தீனிக் காரர்கள் ' கதையில்  புலப்படுகிறது.
ஒரு தெரு, ஒரு வாடகைக்குடியிருப்பு,அங்கு வாழ்ந்த கணங்கள் வருடங்கள் அது சொந்தவீடு அல்லவென்பதால் அற்றுப்போய் விடுமா? அது என்னென்ன விதமாய் மனமூட்டத்தில் புகைமண்டலங்கள் எழுப்பும் என்று 'தெருவாசம்' அலைபாய வைக்கிறது.இப்படி12கதைகளுக்குள்ளும் பல்வேறு உணர்வுக்கோணங்கள் விரிந்தி ருப்பதைப் பட்டியலிட்டுக் காட்டவேண்டிய அவசியம் இருந்தாலும் இங்கே இடம் இல்லை.
இந்தத் தொகுதியில் ஆங்காங்கே இரைந்திருக்கும் மனிதர்கள் பொதுவாக இந்த ஹாட்சிப்ஸ் யுகத்தின் பாஸ்ட்-புட் கலாசாரத்தின் தலைதெறிக்கும் வேக்த்திற்கு மொழியில் அடங்காத எதிர்ப்புக்குரல்கள்.அதிகம் பேசத்தெரியாத
கலைத்திறன் இருப்பதால் பாத்திரங்களையே பேசவைக்கிற பாரதிபாலன் என்னென்னவோ சொல்ல வருகிறார்!
இந்த மழை மட்டும் தான் அப்படியே இருக்கிறது .எப்போதும் போல எல்லோருக்கும் பெய்துகொண்டு என்று முடிகிற தொகுதியின் இறுதிக்  கதையின் இறுதி  வரி என்னமோ சொல்லவில்லை?
போலிப் புதுமை , பிலுக்கிக்காட்டும் படாடோபமற்ற இந்தத் தொகுதியில் ஒரு மேன்மையான மென்மையான ஆத்மா தெரிகிறது.அதன் முடிவற்ற பயணம் விளங்குகிறது.
2012ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க தொகுதி என்று முத்திரை வேண்டுமானால் குத்தி மகிழலாம். ஆனால் முத்திரைகளுக்கு அப்பாலே  போகிற கலைஞன் ?அவன் தரிசனங்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பான்.
வையவன் 

Sunday 3 February 2013

பாவண்ணன்

பாவண்ணன்: 

பாவண்ணன்

விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள கிராமம் எங்கள் வளவனூர். பழைய நிலஅமைப்பில் அது தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தது, இப்போதைய அமைப்பில் அது விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகிறது. அந்த ஊரில் நான் 1958 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் அம்மா பெயர் சகுந்தலா. அப்பா பெயர் பலராமன். தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய அப்பா காலத்தில் மாடு, கன்று, தோட்டம், வயல் என்று எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பங்காளித் தகராறில் எல்லாம் அழிந்துபோய்விட்டன. 
கோயில் நிலத்தில் கூரைவீடு கட்டிக்கொண்டு வாழும்படி நேர்ந்துவிட்டது. அது அவருடைய நெஞ்சில் அழுத்தமான வடுவாகப் பதிந்துவிட்டது. ஒரு விவசாயியாக மறுபடியும் வாழத் தொடங்கவேண்டும் என்று கனவுகளோடு இருந்தார். கொஞ்சம்கொஞ்சமாகப் பணம்சேர்த்து ஏரிக்கரைப்பாசனத்தில் கால்காணி நிலம் வாங்கினார். ஆனால் இரண்டுமூன்று ஆண்டுகள் கூட அதில் விவசாயம் செய்யமுடியவில்லை. அவருக்கான மருத்துவம், குடும்பச்செலவுகள், கடன்கள் எல்லாவற்றையும் சமாளிக்க விற்றுவிடவேண்டியதாக இருந்தது. 
குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். இரண்டு தம்பிகள். வறுமை ஒரு கரிய நிழலாக எங்கள் குடும்பத்தின்மீது படிந்திருந்தது. ஆனால் அதன் வலியை நாங்கள் உணராதபடி அம்மா எங்களை அன்போடும் ஆதரவோடும் பார்த்துக்கொண்டார். கடைத்தெருவில்தான் அப்பா கடை வைத்திருந்தார். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான்தான் கடைக்குச் சென்று வீட்டுச் செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, அப்படியே அரிசி, பருப்பு, காய்கறி எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு திரும்புவேன். வருமானம் இருக்கும் சமயங்களில் அப்பா பணம் தருவார். 
இல்லாத சமயங்களில் ஒன்றும் செய்ய முடியாது. அன்று கேழ்வரகுமாவையும் முருங்கைக்கீரையும் பிசைந்து எல்லாருக்கும் அடை செய்து கொடுப்பார் அம்மா. சுடச்சுட நாங்கள் அதை வாங்கி, மண்ணெண்ணெய் விளக்கில் சுற்றி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். எங்களுக்குக் கதை சொல்லி தூங்கவைத்துவிட்டு, அப்பா வரும்வரை காத்திருப்பார் அம்மா. வறுமையின் துன்பத்தைத் தன் அன்பாலும் சகிப்புத்தன்மையாலும் வென்று குடும்பம் நொடிந்துபோகாமல் காப்பாற்றியது அம்மாதான்.
 எப்படியாவது நான் படித்துப் பட்டம் வாங்கவேண்டும் என்பது அவருடைய கனவு. அப்போதுதான் நல்ல வேலையைப் பெறமுடியும், குடும்பத்தைத் தாங்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால் அப்பா தன் இயலாமையின் காரணமாக, பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடலாமா என்று பல முறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய வற்புறுத்தல் அதிகமானது. தற்செயலாக ஒரு கோயில் திருவிழாவுக்கு புதுச்சேரியிலிருந்து எங்கள் மாமா ஊருக்கு வந்திருந்தார். தங்கிப் படிப்பதற்கு அவரிடம் பேசி அனுமதி பெற்றார் அம்மா. 
புதுச்சேரியில் உள்ள தாகூர் கல்லூரியில் கடைசிநாளன்று சென்று விண்ணப்பம் வாங்கி முழுமை செய்து கொடுத்தேன். கணிதப்பிரிவில் எனக்கு இடம் கிடைத்தது. அம்மாவிடம் நகைகள் என்று சொல்லும்படியாக அப்போது ஒரு ஜோடி கம்மல், மூக்குத்தி, ஒரு வங்கி மோதிரம் மட்டுமே இருந்தன. அவை அனைத்தையும் விற்றதில் நானூற்றிசொச்சம் ரூபாய் கிடைத்தது. நானூறு ரூபாயை அம்மா என்னிடம் கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார். கல்லூரிக் கட்டணத்துக்கு முந்றூற்றுத் தொண்ணூறு ரூபாயும் என் செலவுக்குப் பத்து ரூபாயும் வைத்துக்கொள்ளச் சொன்னார்.
 வளவனூரைவிட்டுப் பிரிந்த பிறகுதான் அதை நான் எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதை உணர்ந்தேன். என் கனவுமுழுக்க என் ஊரின் சித்திரங்களாலேயே நிறைந்திருந்தன. அக்கம்பக்கம் எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு அழகான ஏரி ஒன்று எங்கள் ஊரில் உண்டு. பக்கத்திலிருந்த எல்லாப் பாளையங்களுக்கும் பாசனத்துக்கு ஏரித்தண்ணீர் மதகுகள் வழியாகப் போகும். உயர்ந்த கரைகள். கரைநெடுகப் புளிய மரங்கள், ஆலமரங்கள், பனைமரங்கள், வேப்ப மரங்கள் என வரிசைவரிசையாக நிழல் தந்தபடி இருக்கும். எல்லா நேரங்களிலும் சிலுசிலுவென்று காற்றடித்தபடி இருக்கும். அந்த நிழலில் நானும் என் நண்பனும் பேசிக்கொண்டே நடப்போம். 
கல்கியின் நாவல்களில் திளைத்திருக்கும்போது, அந்த ஏரி எங்கள் கண்களுக்கு தளும்பும் காவேரியாகத் தெரியும். வந்தியத்தேவனாக எங்களை நினைத்துக்கொள்வோம். ருஷ்ய நாவல்களில் மிதந்திருக்கும்போது, அதே ஏரி பனிபடர்ந்த மிசிசிபி நதியாக மாறிவிடும். எங்கள் கற்பனைக்கு அளவே இருந்ததில்லை. ஏரிக்கரையை ஒட்டி ரயில்வே நிலையமும் தோப்பும் இருந்தன. படிப்பதற்கு அங்கேதான் செல்வோம். 
பெரிய புத்தகங்கள் என்றால் ஒரு புத்தகம், பக்கங்கள் குறைந்த புத்தகங்கள் என்றால் இரண்டு புத்தகங்கள் என ஒரே மூச்சில் உட்கார்ந்த வேகத்தில் படித்து முடிப்போம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை, அந்த அமைதியான சூழலில் பேசிப்பேசித்தான் வளர்த்துக்கொண்டோம்.[


Tuesday 22 January 2013

'குரு பிரம்மா

அரவிந்தாட்சன் தொகுத்த 
'குரு பிரம்மா' என்ற நூலிலிருந்து

$அரசன் சொல்லுகிறான், முதலாளி சொல்லுகிறான், தலைவன் சொல்லுகிறான் என்று ஒருவனை கெட்டவன் என்று எடை போடாதே. அதே போலவே - முதல் மூன்று பேரையும்  
$சூரியன் இல்லாத போது விளக்கு வெளிச்சம் தந்து உதவுவது போல; நல்லதைச் சொல்பவன் 'அவன் சிறுவன் தானே' என்று ஒதுக்கி விடாதே! சிறுவனானாலும், சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்தே ஆகணும்.
$வரவை கவனிக்காமல், தன் இஷ்டம் போல் செலவழிக்கும் பொக்கிஷம்; அவன் குபேரனைப் போல செல்வம் படைத்தவனாயிருந்தாலும் கூட விரைவில் அழிந்து விடும்.
 $பகைவர்களிடமும் - குற்றம் செய்தவர்களிடமும் - தயை காட்டு. நண்பனிடம் உண்மையோடு இரு. பொதுவாக பொறுமையை கடைப்பிடிப்பது மிக அவசியம்.
 $நல்ல அறிவுரைகள் - துஷ்டர்களின் காதில் ஏறாது, கோபத்தையே வளர்க்கும்.
 $பழங்களும் - நிழலும் கொண்ட பெரிய மரத்தையே எப்போதும் அணுக வேண்டும்.மதிப்பிற்குரியவர்களையே தஞ்சமடைய வேண்டும். (தாழ்ந்தவர்களையல்ல)கள்ளையும் - பாலையும் ஒன்றாக மதிப்புப் போட்டு விடாதே!
$வேலைக்கமர்த்த - அந்தந்த வேலையில் தேர்ச்சி பெற்றவனாயும், தெரிந்தவனாகவும் இருப்பது முக்கியம். அப்படி அப்படி அமர்த்தியவனே திறமைசாலியாவான். மற்றவன் தடுமாறுவான்.
 $தேவதைகள் - குரு - அரசன் - பசு - குழந்தைகள் - முதியவர்கள். ஆகியவர்களை எக்காரணம் கொண்டும் கோபித்துக் கொள்ளக் கூடாது.
 $கடவுள் நம் உறக்கத்தில் - நம் அவயவங்கள் அனைத்தையும் உறங்கப் பண்ணுகிறார். விழித்ததும் - தாமரை மலர்வது போல - எல்லாமே மலர்கிறது. (கருணைக் கடல்)
$இந்தக் காலத்தில் மஹான்கள் இல்லை என்று நினைப்பது தவறு. மஹான்கள், எல்லா காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை கண்டு கொள்ளக்கூடிய - அறிவும் - ஆவலும் நமக்கு இல்லாதது தான் குறை.
$காவி உடையின் உபயோகம்:- காவி நிறமுடைய செம்மண் விஷத்தை மாற்றும் சக்தி உடையது. வீட்டில் சுவர் ஓரங்களில் - செம்மண் காவி பூசினால் - விஷப்பூச்சி அண்டாது. சந்நியாசிகள் - பாழடைந்த மண்டபம், தெரு ஓரத்திண்ணை, இவைகளில் படுப்பார்கள். அவர்கள் உடையில் அந்த செம்மண் காவியிருப்பதால், விஷ ஜந்துக்கள் - நெருங்க முடியாது

sun of My Life -
Yu-Chi-Hwan
                   shall not the bright sun shine 
                   Above my head where I go?
                  
                   Abiding by the ancient laws,
                   Be it fortune to sleep with the stars.
                  
                   And to endure with this rain and this wind.
                  
                   Let me love my life with zeal
                   And what belongs to it besides;
                   Yet humbly I ask to be delivered
                   From grovelling sentiment ans shame.
                  
                   Since to my enemies, and to those
                   Who count my enemies,
                   I have a justifying  hate,
                   Even when the sun above has stamped
                   Into my sockets his sunflower brand,
                   And I am suddenly butchered like a beast
                  
                   What grudge and grievance should  I bear
                   Against the sun, the center of my life? 
                                                          translated by Lee In-Soo.




head
here in  December in the land of northernmost Manchuria,
Unblest by snow, and slashed by the dry ripping wind of the Amur,
Here at the cross-roads of a small stripped cidadel town, 
Are exposed high on stakes twin heads of whilom bandits;
Their half open eyes staring into the distant polar circuit
Of hills and rivers beneath the sun-set shimmer of the bladed sky.
Know you now in death is one of the four evils
But that the preservation of peace renders at times
Human life as cheap as a chicken or a cur.
Your life might well have proved an instant threat of my death,
So that to rule out force by means of force has ever been
The sanction of blood from times primeval.
Now as I pace along this wind -swept thoroughfare,
I am resolved afresh of the dogged ferocity of life.
You who housed your uncontrollable souls of treachery,
Close your eyes in peace! May merciful heaven
Cover this landscape of waste thoughts with deep snow!   
                                                                                    translated by Lee In-Soo.







பிரதர்ஸ் கரமசாவ்

ப்யோடர் தாஸ்தாவ்ஸ்கியின்
பிரதர்ஸ் கரமசாவ் நாவலில் இருந்து
அவனது அறையின் ஜன்னல்கள் தோட்டத்தைப் பார்த்தன. எங்கள் தோட்டம் நிழல் மிகுந்த ஒன்று. முதிர்ந்த மரங்களில் மொட்டுகள் விட்டிருந்தன. வசந்தத்தின் முதல் வருகைப்பறவைகள் கிளைகளில் அமர்ந்து ஜன்னல்களை நோக்கிக் கீச்சிட்டுப் பாடிக்கொண்டிருந்தன . அவைகளைப் பார்த்து ரசித்துவிட்டு  உடனே அவன் அவற்றிடம் மன்னிப்பை யாசிக்கத்தொடங்கினான்." சொர்க்கத்துப் பறவைகளே , ஆனந்தப்பட்சிகளே , உங்களுக்கெதிராகவும் நான் பாவம் செய்திருக்கிறேன்.என்னை மன்னியுங்கள்.
அந்த நேரத்தில் எங்களில் யாருக்குமே அதைப் புரிந்து கொள்ளத்தெரிய வில்லை..ஆனால் அவன் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.
"ஆம்,என்னைச்சுற்றி பறவைகள், மரங்கள், புல்வெளிகள், ஆகாயம்  என்று கடவுளின் மகிமை சூழ்ந்திருக்க அவற்றை நான் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டு அவமானத்திலே வாழ்ந்துவந்தேன்" என்றான்.
 அவனுடைய தாய் அழுதபடியே   "நீ உன் மீது மிகுதியான  பாவச் சுமைகளை ஏற்றிக்கொள்கிறாய் " என்றாள்  
"அருமை அம்மா, நான் துன்பத்தால் அழவில்லை. அது ஆனந்தக்கண்ணீர். அவற்றின் எதிரே நான் பணிவோடு இருக்கவே விரும்புகிறேன். காரணம் அவற்றைப் போதிய அளவு   எப்படி நேசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் எதிரே நான் பாவம் செய்திருந்த போதும் எல்லாமும் எல்லோரும் என்னை மன்னிக்கின்றனர். அது தான் சொர்க்கம். இப்போது நான் சொர்க்கத்தில் இல்லையா சொல்?"என்றான்.

From- Brothers Karamazov by Fyodor Dostoyevsky 
The windows of his room looked out into the garden, and our garden was a shady one, with old trees in it which were coming into bud.The first birds of spring were flitting in the branches, chirruping and singing at the windows. And looking at them and admiring them,he began suddenly begging their forgiveness too: “Birds of heaven,happy birds, forgive me, for I have sinned against you too.” None ofus could understand that at the time, but he shed tears of joy. “Yes,”he said, “there was such a glory of God all about me: birds, trees,meadows, sky; only I lived in shame and dishonoured it all and did not notice the beauty and glory.”
    “You take too many sins on yourself,” mother used to say, weeping.
    “Mother, darling, it’s for joy, not for grief I am crying.Though I can’t explain it to you, I like to humble myself before them,for I don’t know how to love them enough. If I have sinned against everyone, yet all forgive me, too, and that’s heaven. Am I not in heaven now?”

'ஸ்னோஸ் ஆப் கிளிமாஞ்சாரோ'

'எர்னெஸ்ட் ஹெமிங்வே'வின் 
'ஸ்னோஸ் ஆப் கிளிமாஞ்சாரோ' விலிருந்து
"இல்லை.இது எனக்கு நன்றாக இருக்கிறது" என்றான்.
 ஆகஇப்போது எல்லாம் முடிந்து விட்டது என்று அவன் நினைத்தான்.ஆக ,அதை முடித்து வைப்பதற்கு அவனுக்கு மற்றொரு வாய்ப்பு கிட்டாது .ஒரு பானத்திற்குப் பிந்திய தகராறில் இப்படியாக அது முடிந்தது .வலது காலில் காங்கரீன் தொடங்கியதிலிருந்து அவனுக்கு ஒரு பானத்திற்குப் பிந்திய சச்சரவில் அது இப்படியாக  முடிந்தது வலது காலில் காங்கரீன் தொடங்கியதிலிருந்தேவலியில்லை. வலியோடு அந்த பயபீதியும் போய்விட்டது. முடிவில் இது தான் அதன் இறுதி  என்று நினைத்தபோது  இப்போது பெருமளவில் களைப்பும் கோபமும் வந்தது. வருஷக்கணக்காக அது அவனை ஆட்டிப்படைத்தது. இப்போது அதன் அளவில் அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது.போதிய அளவு களைத்துபோனது எப்படி எல்லாவற்றையும்  எளிதாக்கி விடுகிறது என்பது விநோதம் தான்.
இப்போது  நன்றாக எழுதுவதற்குப்போதுமான அளவு தெரிந்து கொண்டபிறகு தான்  எழுதவேண்டும் என்று அவன் சேர்த்து  வைத்திருந்த  விஷயங்களை  இனி எழுதவே வேண்டாம் . அவற்றை எழுத முயற்சிப்பதில் தோல்வி அடையவேண்டியே வராது. இனி அவன் அவற்றை தெரிந்து கொள்ளவேண்டி வராது   'உன்னால்  எழுதவே  முடியாது அதனால் தான் அவற்றை ஒதுக்கி வைத்துத் தொடங்காமலேயே இருந்தாய் '.நல்லது. இப்போது அவனுக்குத்  தெரியவேண்டி வராது 
"நாம் வந்தே இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்." அந்தப் பெண்மணி சொன்னாள். கிளாசைக் கையில் பிடித்தபடி உதட்டைக் கடித்துக்கொண்டே அவள் அவனைப் பார்த்தாள்
"இது மாதிரி எதுவும் பாரிசில் உனக்குக் கிடைத்திருக்காது" என்றாள்
"உனக்குப் பாரீசைத்தான் நீ நேசிப்பதாக எப்போதும் சொல்வாய்.நாம் பாரிஸிலேயே இருந்திருக்க வேண்டும் அல்லது வேறெங்காவது போயிருக்கவேண்டும். நான் எங்கேயாவது போயிருப்பேன். நீ விரும்புகிற எந்த இடத்திற்கும் போவதாக நான் சொன்னேன். நீ  ஷூட்டிங் செய்ய விரும்பி யிருந்தால் நாம் ஹங்கேரிக்கு ஷூட்டிங்குக்குப் போயிருக்கலாம்.அங்கே சௌகர்யமாக இருந்திருக்கும்."
Snows of Kilimanjaro
Ernest Hemingway
No," he said. "It's good for me."
So now it was all over, he thought. So now he would never have a chance to finish it. So this was the way it ended in a bickering over a drink. Since the gangrene started in his right leg he had no pain and with the pain the horror had gone and all he felt now was a great tiredness and anger that this was the end of it. For this, that now was coming, he had very little curiosity. For years it had obsessed him; but now it meant nothing in itself. It was strange how easy being tired enough made it.
Now he would never write the things that he had saved to write until he knew enough to write them well. Well, he would not have to fail at trying to write them either. Maybe you could never write them, and that was why you put them off and delayed the starting. Well he would never know, now.
"I wish we'd never come," the woman said. She was looking at him holding the glass and biting her lip. "You never would have gotten anything like this in Paris.
“You always said you loved Paris. We could have stayed in Paris or gone anywhere. I'd have gone anywhere. I said I'd go anywhere you wanted. If you wanted to shoot we could have gone shooting in Hungary and been comfortable."

Monday 21 January 2013

'பிரான்ஸ் காப்கா'வின் 'மெடமார்பசிஸ்'

 அவர்களோடு  அவனும் சேர்ந்து நடித்து விடவேண்டும்.
கே' ஒரு சுதந்திரமான நாட்டில் வசித்தான். அங்கு எல்லா இடங்களும் சமாதானமாக இருந்தன. எல்லாச்சட்டங்களும்  நேர்மை ஒழுங்கானவை. அவை சீராகக் கடைப்பிடிக்கப்பட்டன. அவனது  சொந்த வீட்டில் அவனை எதிர்க்கும் துணிவு யாருக்கு உண்டு ? அவன் எப்போதுமே வாழ்க்கையை எவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமோ அப்படி எடுத்துக்கொண்டான், பாலங்கள் குறுக்கிட்டால் அவற்றைக் கடந்தான்.எல்லாமே ஓர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிய சந்தர்ப்பங்களிலும் எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டதில்லை. ஆனால் இங்கு அது செய்ய வேண்டிய சரியான வேலையாகத் தோன்றவில்லை.
அதை அவன் ஒரு வேடிக்கையாக , பாங்கில் பணியாற்றும் அவனது சகாக்கள் ஏதோ ஒரு தெரியாத காரணத்துக்காக ஏற்பாடு செய்துள்ளதாக எடுத்துக்கொண்டு இருக்கலாம்.மேலும் இன்று அவனது முப்பதாவது பிறந்தநாள். அது நடக்கக்கூடியது தான்.அந்தபோலீஸ்காரர்கள் முகத்தைப்  
பார்த்து ஏதாவது ஒரு மாதிரி சிரிப்பதைத் தான் அவன் செய்யவேண்டும், அவர்களும் அவனோடு சேர்ந்து சிரிப்பார்கள். ஒருக்கால் அவர்கள் தெரு மூலையில் இருக்கும் வியாபாரிகளாக இருக்கலாம்; பார்த்தால் அப்படித்தான் தென்படுகிறார்கள். அவன் ஒரேயடியாக , பிரான்ஸ் என்று அழைக்கப்பட்ட மனிதன் கண்ணில் பட்டதில் இருந்து அப்படி ஒரு முடிவெடுத்து விடவில்லை. அந்த ஜனங்களிடம் கிடைக்கக்கூடிய எந்த ஒரு சிறிய அனுகூலத்தையும் அவன் தவற விட்டுவிடக்கூடாது
அதில் ஒரு மிகச் சிறிய சிக்கல் உண்டு. மக்கள் ஒரு வேடிக்கையைப் புரிந்துகொள்ளத்தெரியாதவன் எனறு பின்னால் சொல்லக்கூடும். அவனது மிகவும் முன்னெச்செரிக்கையுடைய நண்பர்களைப்போலன்றிபொதுவாக அவன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிற வழக்கம் இல்லாதவன் தான்.அதற்குப் பின் என்ன நடக்கும்,அதனால் அவன் எவ்வளவு வருந்தவேண்டி வரும்  என்று சற்றும் நினைக்காமல் தான் அவன் செயல்பட்டான். மீண்டும் அது நடக்கக்கூடாது , குறைந்த பட்சம் இந்த முறை. அவர்கள் நாடகம் நடிப்பதாய் இருந்தால் அவர்களோடு  அவனும் சேர்ந்து நடித்து விடவேண்டும்.
'பிரான்ஸ் காப்கா'வின் 'மெடமார்பசிஸ்' நாவலில் இருந்து 

K. was living in a free country, after all, everywhere was at peace, all laws were decent and were upheld, who was it who dared accost him in his own home? He was always inclined to take life as lightly as he could, to cross bridges when he came to them, pay no heed for the future, even when everything seemed under threat. But here that did not seem the right thing to do.
 He could have taken it all as a joke, a big joke set up by his colleagues at the bank for some unknown reason, or also perhaps because today was his thirtieth birthday, it was all possible of course, maybe all he had to do was laugh in the policemen's face in some way and they would laugh with him, maybe they were tradesmen from the corner of the street, they looked like they might be - but he was nonetheless determined, ever since he first caught sight of the one called Franz, not to lose any slight advantage he might have had over these people.
There was a very slight risk that people would later say he couldn't understand a joke, but - although he wasn't normally in the habit of learning from experience - he might also have had a few unimportant occasions in mind when, unlike his more cautious friends, he had acted with no thought at all for what might follow and had been made to suffer for it. He didn't want that to happen again, not this time atleast; if they were play-acting he would act along with them.
From 'Metamorphosis'-Franz Kafka